Home » » மீண்டும் வரணும் பிலிம் சிட்டி முதல்வரிடம் கோரிக்கை!

மீண்டும் வரணும் பிலிம் சிட்டி முதல்வரிடம் கோரிக்கை!

Written By hits on Wednesday, 22 June 2011 | 22:06


keyar-21-06-11
சென்னையின் மையப்பகுதியில் பிலிம் சிட்டி கட்டிக் கொடுத்தேன். அது சிதைக்கப்பட்ட போது ஒரு சினிமாக்காரர்களும் குரல் கொடுக்கவில்லையே என்று முதல்வர் ஜெயலலிதா முக்கிய விவிஐபியிடம் வருந்தியதாக ஒரு செய்தியை வெளியிட்டிருந்தோம்.

அம்மாவின் கேள்வி இப்போதுதான் உறுத்தியிருக்கிறது சினிமாக்காரர்களை. நேற்று சென்னையில் நடந்த டூ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பிரபல தயாரிப்பாளர் கேயார், இது குறித்து சில வார்த்தைகளை உதிர்த்திருக்கிறார்கள்.

கடந்த ஆட்சியில் மூடப்பட்ட திரைப்பட நகரை மீண்டும் உருவாக்க வேண்டும். இதற்கு அரசாங்கம் முதலீடு செய்ய தேவையில்லை. முதலீடு செய்வதற்கு தனியார் நிறுவனங்கள் தயாராக உள்ளன. இதன் மூலம் அரசாங்கத்துக்கும் வருமானம் வரும். தனியார் நிறுவனங்களுக்கும் வருமானம் வரும்.

கேயாரின் இந்த கோரிக்கை முதல்வரின் பார்வைக்கு போய் சேர அதிக நேரம் பிடிக்கப் போவதில்லை. ஏனென்றால் அவர் மனதில் இருக்கிற விஷயத்தைதான் கேயார் கூறியிருக்கிறார். விரைவில் பிலிம் சிட்டியை புதுப் பொலிவோடு எதிர்பார்க்கலாம்!
Share this article :

Post a Comment