பிரபல தெலுங்கு நடிகர் சாய்குமார். இவர் தமிழ், கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். இவரது வீடு சென்னை வளசரவாக்கம் தீவேலிகுப்பம் கனகதாரா நகரில் உள்ளது.
இங்கு இவரது மனைவி மற்றும் மகன்கள் தங்கியிருந்தனர். கடந்த மாதம் சாய்குமார் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் ஐதராபாத் சென்றுவிட்டார். இன்று வேலைக்காரர்கள் வந்து பார்த்தபோது சாய்குமார் வீட்டின் கதவு பெயர்க்கப்பட்டு இருந்தது. வீட்டின் உள்ளே இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு இருந்தன.
இதுகுறித்து வளசரவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். இதுபற்றி ஐதராபாத்தில் இருக்கும் நடிகர் சாய்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் இன்று மாலை விமானம் மூலம் சென்னை வருகிறார். அவர் வந்தபிறகுதான் வீட்டில் எவ்வளவு கொள்ளை போய் இருப்பது தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
Post a Comment