Home » » சென்னையை வந்தடைந்த ரஜினிகாந் பரபரப்பு வீடியோக்கள்!

சென்னையை வந்தடைந்த ரஜினிகாந் பரபரப்பு வீடியோக்கள்!

Written By hits on Wednesday, 13 July 2011 | 22:29

ரஜினியின் வருகையை எதிர்பார்த்து அவருடைய ரசிகர்கள் அனைவரும் விமான நிலைய பிரதான நுழைவு வாயிலில் மேள தாளம், ஆட்டம் பாட்டம் என அமர்க்களப்படுத்திக் கொண்டிருந்தனர். 

இரவு 9.40 மணியளவில் விமானநிலைய 6-வது வாயில் (விஐபி பிரிவு) வழியாக அவர் வருகிறார் என்று தகவல் வெளியானது. இதையடுத்து ரசிகர்களும், பத்திரிகையாளர்களும் 6-வது வாயிலில் கூடினார்கள். இரவு 10 மணிக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் ரஜினிகாந்த் வந்திறங்கினார்.

வாயிலின் முகப்பில் நின்றிருந்த தனது காருக்கு வந்த ரஜினிகாந்த், ரசிகர்களைப் பார்த்ததும் தனது பாணியில் கைகளை தலைக்கு மேல் உயர்த்தி 3 முறை வணக்கம் தெரிவித்து கையசைத்தார்.

வெள்ளைத் தாடியுடன் காணப்பட்ட ரஜினிகாந்த் நீல நிற ஜீன்ஸ் பேண்ட், வெள்ளை நிற சட்டை, கருப்புக் கண்ணாடி அணிந்திருந்தார்.

Share this article :

Post a Comment